தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவை.. 2 லட்சம் கோடி முதலீடு..!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தனது 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்தியது.

அனைவரும் எதிர்பார்த்த படியே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை அறிமுகம் நாள், முதலீட்டுத் தொகை என ுல முக்கியமான தகவல்களை வெளியிட்டு வியக்கவைத்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோ TRUE 5G சேவை அளிக்க உள்ளது.

இளவரசி டயானாவின் பிரத்யேக கார் ஏலம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ 5 சேவையை அறிமுகம் செய்யவும், இந்தியா முழுக்க விரிவாக்கம் செய்யவும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

5ஜி சேவை

5ஜி சேவை

இந்தியாவிலேயே யாரும் செய்திடாத வகையில் வேகமாக 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். வருகிற தீபாவளி பண்டிகைக்குள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

டிசம்பர் 2023
 

டிசம்பர் 2023

டிசம்பர் 2023-க்குள் இந்தியாவில் ஒவ்வொரு டவுன், தாலுக்கா, கிராமம் வரையில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதற்காக 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5ஜி அலைக்கற்றை

5ஜி அலைக்கற்றை

இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ சுமார் 88,078 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து சக போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் அதிகப்படியான 5ஜி அலைக்கற்றைக் கைப்பற்றியுள்ளது.

பைபர் நெட்வொர்க்

பைபர் நெட்வொர்க்

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தற்போது 33 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவிலான பைபர் நெட்வொர்க் வைத்துள்ளது. இதை விரிவாக்கம் செய்யவும் தற்போது கைப்பற்றியுள்ள கலவையான ஸ்பெக்ட்ரம் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பை அளிக்க முடியும் என ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance AGM 2022: Reliance Jio 5G launch chennai, delhi, mumbai by diwali with 2 lakh crore investment

Reliance AGM 2022: Reliance Jio 5G launch Chennai, delhi, mumbai by diwali with 2 lakh crore investment தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவை.. 2 லட்சம் கோடி முதலீடு..!

Story first published: Monday, August 29, 2022, 14:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.