பாட்னா: பயண விடுப்பு சலுகை ஊழல் வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அனில்குமார் சஹானிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை இடைதேர்தல்தலில் வெற்றி பெற்ற அனில்குமார் சஹானி தனது பதவிக்காலத்தில் எல்.டி.சி.எனப்படும் பயண விடுப்பு சலுகையை முறைகேடாக பயன்படுத்தி ஊழல் புகார் செய்ததாக புகார் வந்தது. இந்த வழக்கு விசாரித்த சிபிஐ சஹானி உள்ளிட்ட மூன்று பேர் மீது 2013-ல் வழக்குப்பதிவு செய்தது.
இது குறித்து விசாரணைக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சஹானி விமானத்தில் பயனித்ததாகவும், ஹோட்டல்களில் தங்கியதாகவும், போலி ரசீதுகள் மூலம் சுமார் ரூ.24 லட்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில்குமார் சஹானி உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்து மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.