புதுடில்லி:புதுடில்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் துவங்குகிறது. இந்த வழக்கில் எவ்வித காகித பயன்பாடும் இருக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
புதுடில்லியில் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமர்வு கூறியுள்ளதாவது:இந்த வழக்கின் விசாரணை எப்போது நடக்கும் என்பது குறித்து, வரும் 27ம் தேதி தீர்மானிக்கப்படும்; ஆக., மாத நடுவில் விசாரணை துவங்கும். இந்த அமர்வு, பசுமை அமர்வாக இருக்கும். அதாவது, காகிதமில்லா அமர்வாக இருக்கும். அதனால், எந்தத் தரப்பும் தங்களுடைய சார்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. அனைத்தும் ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement