மும்பை: தமிழில் ‘காதல் தேசம்’ படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தபு. அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, அர்ஜுன் நடித்த ‘தாயின் மணிக்கொடி’ அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஜோதிகா நடித்த ’சினேகிதியே’, பிரியதர்ஷன் இயக்கிய ‘சிறைச்சாலை’ ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். தபுவுக்கு 50 வயதுக்கு மேல் ஆகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தபு கூறியது: மற்றவர்களை போல் எனக்கும் குழந்தையை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. குழந்தையை வளர்க்க விரும்புகிறேன். அதற்காக திருமணம் செய்ய வேண்டும் என அவசியம் கிடையாது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது இப்போது சுலபம் ஆகிவிட்டது. அதனால் அதுபோல் செய்யலாம்.
