வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐபோன் 14 சீரியல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடந்தாண்டு செப்டம்பரில் கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில், ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை துவங்கியது.
இந்நிலையில் ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் 14 சீரியல், மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நிறுவனங்கள் , ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
![]() |
இதையடுத்து ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ச் 8, ஹெட் போன்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் சி.ஐ.ஓ. பேசினார். ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐ போன்களின் விலை விவரங்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement