சென்னை: ஒரு பக்கம் நடிகர் அஜித்தின் டூர் புகைப்படங்கள் டிரெண்டாகி வரும் நிலையில், மாஸ்டர் ஷூட்டிங் சமயத்தில் டெல்லி வீதிகளில் சுற்றித் திரிந்த நடிகர் விஜய்யின் சூப்பரான புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் நடிகர் ஷாந்தனு.
வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் ஏகே61 கிளாஷ் வருமா? வராதா? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
ஆனால், சோஷியல் மீடியாவில் விஜய், அஜித் புகைப்படங்களில் கிளாஷ் தினமும் போட்டா போட்டி போட்டு வந்து கொண்டே இருக்கிறது.
ஹெலிகாப்டர் ஓட்டும் அஜித்
பைக் டூர் எல்லாம் முடித்து விட்டு அடுத்தக் கட்டமாக நடிகர் அஜித் ஹெலிகாப்டர் ஓட்டும் வீடியோக்களையும், போட்டோக்களையும் ஷேர் செய்து ஏகே61 அப்டேட் இப்போதைக்கு ரசிகர்கள் கேட்காத அளவுக்கு பார்த்துக் கொள்கிறார் என சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு ஏகப்பட்ட டூர் போட்டோக்கள் குவிந்து வருகின்றன. அஜித் தரிசனம் கிடைத்தாலும், ரசிகர்களுக்கு ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தான் தேவை.

அதிகரிக்கும் வாரிசு வியாபாரம்
வரும் பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே 250 கோடிக்கும் மேல் சென்று விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு படத்தின் ஏகப்பட்ட காட்சிகள் லீக் ஆன நிலையில், படக்குழு இதற்கு மேல் எந்த காட்சிகளும் லீக் ஆக கூடாது என படு செக்யூரிட்டி போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் மெமரீஸ்
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகர் ஷாந்தனு பாக்கியராஜ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்திற்காக டெல்லியில் ஷூட்டிங் செய்த போது நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் வெளியே சுற்றிய போது எடுத்துக் கொண்ட பிரத்யேகமான செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார்.

குவியும் லைக்ஸ்
ஷாந்தனு இப்படியொரு அன்சீன் போட்டோவை ஷேர் செய்த நிலையில், அதை அதிகமாக விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், அந்த ட்வீட்டுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், நடிகர் விஜய்யின் இதுபோன்ற க்யூட்டான ஏதாவது அன்சீன் போட்டோ இருந்தாலும் ஷேர் பண்ணுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.