ஒரு சொட்டு எண்ணை… வீட்டில் தக்காளி வாரக் கணக்கில் அழுகாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!

தக்காளி, வெங்காயத்துக்காக ஆட்சியே மாறி இருக்கு தெரியுமா? அப்படியொரு தக்காளிய விலை இல்லாம விவசாயிங்க ரோட்டுல வீசிவிட்டு போவாங்க.. இதுவும் மறுபுறம் நடக்கும்.
இதெல்லாம் இருக்கட்டும். பொதுவாக, தகதகவென இருக்கும் தக்காளி பழம் வாங்கிய கொஞ்ச நாள்களில் அதன் பொலிவை இழந்து சுருங்க ஆரம்பித்துவிடும்.

உணவே மருந்து

தக்காளியை அதிகபட்சம் 14 நாள்கள் வரை வைத்திருக்கலாம். அதற்கு மேல் தக்காளியில் பயன்படுத்துவது கூடாது. உணவில் அடிக்கடி தக்காளியை சேர்த்து வந்தால் நம் நோயொதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

தக்காளியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண்பார்வை பிரச்னைகளை சரியாக்குகிறது. மேலும் தக்காளியில் இரும்பு சத்தும் அதிகம் காணப்படுகிறது.

தக்காளி ஜூஸ்

வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து சமமாக தக்காளியில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது.
மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட சாப்பிடலாம்.

தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்படையும். தக்காளி சாறு முகத்திற்கும் பொலிவையும் கொடுக்கிறது.
வெயிலில் சென்று வந்தால் கருமை நீங்கும், மாசுமருவற்ற முகத்தை ஜொலிப்பாக வைத்துக் கொள்ளவும் தக்காளி சாறை சருமத்தின் மீது தடவி உலர விட்டு கழுவலாம்.

தக்காளி கெடாமல் இருக்க..

தற்போது இந்தத் தக்காளியை எப்படி நீண்ட நாள்கள் கெடாமல் வைத்திருப்பது என்று பார்க்கலாம்.
இதற்கு நாம் தக்காளியை வாங்கி வந்தவுடன் காய் மற்றும் பழத்தை தனித்தனியாக பிரித்து வைத்து விட வேண்டும்.
தொடர்ந்து, ஒவ்வொரு தக்காளியையும் நன்கு கழுவி ஃபேன் காற்றில் காய வைத்து விட வேண்டும்.

தக்காளியில் இருக்கும் ஈரப்பதம் நீங்கியவுடன் நன்கு துடைத்து, தக்காளி காம்பு பகுதியில் காற்று புகாதபடி லேசாக ஒரு விரலால் சமையல் எண்ணெயைத் தொட்டு வைக்கலாம்.
மேலும் தக்காளி காம்பு பகுதியை கீழே வரும்படி மாற்றி வைக்கலாம். இப்படி செய்யும் பொழுது தக்காளியை பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. பிரிட்ஜ் இல்லாத வீடுகளில் கூட தக்காளியை நீண்ட நாள்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.