மூணாறு,மூணாறில் தேசிய பூங்காக்கள் உட்பட வனப்பகுதிகளில், கடந்த நான்கு நாட்கள் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 189 வகை வண்ணத்துப்பூச்சிகள், 184 வகை பறவைகள் கண்டறியப்பட்டன. கேரள மாநிலத்தின் மூணாறு வன உயிரின கோட்டத்திற்குட்பட்ட இரவிகுளம், ஆனமுடி, பாம்பாடும்சோலை, மதிகெட்டான் தேசிய பூங்காக்களிலும், குறிஞ்சிமலை, சின்னார் வன உயிரின சரணாலயங்களிலும் பறவைகள், வண்ணத்துப்பூச்சி, தும்பிகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு நான்கு நாட்களுக்கு நடந்தது.
இதில், மூணாறு வன உயிரின பாதுகாவலர் வினோத் தலைமையில் 160 பேர் பங்கேற்றனர்.கணக்கெடுப்பில், 189 வகை வண்ணத்துப்பூச்சிகள், 184 வகை பறவைகள், 52 வகை தும்பிகள், 25 வகை எறும்புகள், 12 வகை தவளைகள், ஏழு வகை ஊர்வன, எட்டு வகை பூச்சிகள் கண்டறியப்பட்டன.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் பறவைகளான ‘பெயின்டட் புஷ் கொயல், பெயின்டட் ஸ்பர்பால், பலீட் ஹாரியர்’ ஆகியவையும், சாதாரண காடுகளில் காணப்படும் ‘பிளே கேச்சர், கிரே பெல்லிட், ப்ளாக் அன்ட் ஆரஞ்ச் ப்ளே கேச்சர், ஒயிட் பெல்லிட்’ ஆகியவையும் கண்டறியப்பட்டன.அழிந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ள வண்ணத்துப்பூச்சிகளான ‘ரெட் டிஸ்க் புஷ் பிரவுன்,நீலகிரி டைகர்’ உட்படபல்வேறு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மாநிலத்தில் மிகவும் சிறிய வண்ணத்துப்பூச்சியான ‘கிரேட் ஜூவல்’ தும்பி இனத்தில் ‘பர்மா கோபஸ், புரோட்டஸ்டிட் மோன்டியோலா, இன்டோலைட்டர்ஸ் கிரேஷிலன்ட்’ ஆகியவையும் கண்டறியப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement