புலியுடன் கோல்டன் ரிட்ரீவர் நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதில் சிங்கம் ஒன்று அமர்ந்து இருக்கிறது. அதன் முன்னே அதனை பார்த்தபடி வரிப்புலி ஒன்று அமர்ந்திருக்கிறது. அதன் அருகே நாய் செல்கிறது.
திடீரென புலியின் காது ஒன்றை நாய் வாயில் கவ்வி கொள்கிறது. அதனை விடாமல் நாய் பிடித்து இழுக்கிறது. அதுவரை பொறுமையாக இருந்த புலி சற்று நேரத்தில் வலி பொறுக்காமல் நாயை தனது முன்னங்கால்களை கொண்டு அடிக்க பாய்கிறது. எனினும், தனது பிடியை நாய் விடாமல் இழுக்கிறது.