கர்நாடக மாநிலத்தில் வாங்கிய மதுபானத்தை குடித்த ஓசூரை சேர்ந்த இருவர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஒருவர் பலியாக அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் : ஓசூர் பகுதியை சேர்ந்த முனிராஜ், வெங்கடரெட்டி ஆகியோர் கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.
மது அருந்திய சிறிது நேரத்தில் வீட்டுக்கு சென்ற இருவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த முனிராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் வெங்கடரெட்டி ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில மதுபானத்தில் விஷம் ஏதும் கலக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.