ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தங்க்பவா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நேற்று காலை வரை துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
