
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் ஐப்பசி மற்றும் மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி கோயில் நடை திறக்கப்படவுள்ளது. இதைதொடர்ந்து, 22-ம் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் பூஜைகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கேரள அரசின் உத்தரவுக்கு இணங்க சுவாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.