கோவையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளி மாணவர்களை தூதுவர்களாக மாற்றும் நோக்குடன், குட்டி காவலர் திட்டத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி மூலம் அவர் துவங்கி வைத்தார்.
இதையடுத்து கொடிசியா மைதானத்தில் 5,000 மாணவர்களும், பல்வேறு பள்ளிகளில் நான்கரை லட்சம் மாணவர்களும் உறுதிமொழி எடுத்தனர்.
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததால், ஏசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சாதனைக்கான சான்றிதழ், முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் கருணை அடிப்படையில் 75 பேருக்கு பணி நியமன ஆணை, 586 பேருக்கு பணி நிரந்தர ஆணை, நிரந்தர பணியாளர்களுக்கு ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையையும் முதலமைச்சர் வழங்கினார்.
இதனிடையே, தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட்ட விருதுகளை, முதலமைச்சரிடம் கூட்டுறவு அமைச்சர் ஐ. பெரியசாமி காண்பித்து வாழ்த்து பெற்றார்.