விழுப்புரம் மாவட்டத்தில் வெல்டிங் வைத்த போது திடீரென லாரியில் தீ பிடித்ததால் சுமார் 150 டயர்கள் தீயில் எரிந்து நாசமாகின.
புதுச்சேரியிலிருந்து மகாராஷ்டிராவிற்கு எம்.ஆர்.எப் டயர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, லாரி பம்பர் பகுதியில் திடீரென ஏற்பட்ட பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்ரோடு சாலையில் உள்ள ஒரு கடையில் லாரியை நிறுத்தி வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென லாரியில் தீப்பிடித்தது. தியானது கொழுந்துவிட்டு எரிந்து லாரியில் இருந்த டயர் முழுவதும் தீ பற்றியுள்ளது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 150 டயர்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்து, எர்த் வைக்காமல் வெல்டிங் வைத்ததால் ஸ்பார்காகி தீ பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து வளவனூர் போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.