புதுடில்லி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள , மல்யுத்த வீரர் சுஷில்குமார் மீதான குற்றச்சாட்டை டில்லி கோர்ட் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ உள்ளது.
இந்நிலையில், இவரை கைது செய்த பஞ்சாப் போலீசார், டில்லி போலீசிடம் ஒப்படைத்தனர்.
இவர் மீதான கொலை வழக்கு டில்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நீதிபதி சிவாஜி ஆனந்த் விசாரணை நடத்தினார். இதையடுத்து சுஷில்குமார் மீதான குற்றச்சாட்டை கோர்ட் பதிவு செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement