வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : தன் வீட்டில் அடிக்கடி நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போவதைக் கண்ட மும்பை தொழிலதிபர், இது பேயின் வேலையாக இருக்கும் என முதலில் நினைத்தார். ஆனால் போலீஸ் விசாரணையில் அவருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
தலைநகர் மும்பையின் பைகுலா பகுதியில் வசித்து வருபவர் அப்துல்லாகர் ஷபீர் கோகலாவா. தொழிலதிபரான இவருடைய வீட்டில் அடிக்கடி நகை உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயின.
![]() |
போலீசில் புகார்
முஸ்லிம் மத நம்பிக்கையின்படி, ‘டிஜின்’ என்ற நல்ல பேய் தான் தன் வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பொருட்களை திருடுவதாக அவர் நினைத்தார். ஆனால், நாளுக்கு நாள் அதிக அளவில் நகைகள் போக, பணமும் காணாமல் போக ஆரம்பித்தது. இவ்வாறு, 42 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நகைகள், பணம் காணாமல் போனது.
அப்போது தான், ‘இந்த நல்ல பேய் நகையைத் திருடும்; ஆனால் பணத்தை திருடுமா’ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தப் பணம், நகைகளை, அவருடைய உறவுக்காரரான, 12 வயது சிறுமி திருடி வந்தது தெரியவந்தது. அந்தச் சிறுமியிடம் விசாரித்தபோது, குஜராத்தின் சூரத்தில் உள்ள உறவினர், இவ்வாறு பொருட்களை திருடித் தரும்படி கூறியதாக அப்பாவியாக கூறினார்.
விசாரணை
இதையடுத்து, சூரத்தில் உள்ள அந்த இளைஞர் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 40 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறுமிக்கும், இந்தத் திருட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement