தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தை விட அதிகரிக்காது பயணிக்குமாறு இலத்திரனியல் பலகைகள் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இருள் சூழ்ந்துள்ளதனால், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்தும் போது வாகன முன் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை வாகன சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.