’ஆம்புலன்ஸ் கிடைக்கல’..பாம்பு கடித்து உயிரிழந்த மகனின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தந்தை!

திருப்பதி அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மகனின் சடலத்தை ஆம்புலன்ஸ் வராததால் தந்தை தோளில் சுமந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கேவிபி புரம் மண்டலம் கீழபுத்தூர்கிராமத்தைச் சேர்ந்த செஞ்சய்யா என்பவரது 7 வயது மகன் பசவய்யாவை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக கேவிபி புரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
image
இதனையடுத்து உயிரிழந்த மகனின் சடலத்தை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்காததால் மகனின் சடலத்தை தோளில் சுமந்தும், பின்னர் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.