பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்


தேடப்படும் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு – யூனியன் பிளேஸ் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட சட்டவிரோத கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அங்கம் வகித்தவர்கள் தொடர்பிலே பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 

பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் | The Police Have Asked The Public Help Sl Protest

தொலைபேசி இலக்கம் 

இதன்படி, இந்த சந்திப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இதுவரை அடையாளம் காணப்படாத மற்றும் கைது செய்யத் தேடப்படும் சந்தேகநபர்கள் குழுவை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தக் குழு தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  0718591561 அல்லது குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி 0718594414 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார்  கோருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.