திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது. ரோப் கார் சேவையானது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருவது வழக்கம்.
இதில் ஒரு பெட்டிக்கு நான்கு பேர் வீதம் மொத்தம் நான்கு பெட்டிகளில் 16 பேர் கீழிலிருந்து மேலே பயணம் செய்யலாம். இந்நிலையில் இன்று பழனிமலைக்கு செல்லும் ரோப் காரானது அதிக பாரத்தின் காரணமாக பாறை மீது உரசியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பாறையில் உரசியதினால் ரோப் காரின் ஒருபகுதி சிறிதளவு சேதமானது.
வழக்கத்தை விட அதிக எடை இருந்ததால், இன்று ரோப் கார் பெட்டியானது தாழ்வாக சென்றதில் பாறை மீது மோதியாதல் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாரத்தை குறைத்தபின்பு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டது.