
ஹிந்தியில் பாடகராக களமிறங்கிய சிம்பு
நடிகர் சிம்பு பாடகரும் கூட. இவரது நண்பரும், நடிகருமான மஹத் ஹிந்தியில் நடித்துள்ள படம் ‛டபுள் எக்ஸல்'. இதில் அவருடன் சோனாக்ஷி சின்ஹா, ஹூயுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் தாலி தாலி என்ற பாடலை பாடி பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகி உள்ளார் சிம்பு. இந்த பாடலை வெளியிட்டு சிம்பு கூறுகையில், ‛‛எனது நண்பர் மஹத்திற்காக பாலிவுட்டில் அறிமுகமாகி நான் ஒரு பாடலை பாடி உள்ளேன். இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.