அமெரிக்காவில் காண்டாக்ட் லென்ஸ்களை கழற்ற மறந்த நோயாளியின் கண்ணிலிருந்து 23 லென்ஸ்களை அகற்றும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண் ஒருவர் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்ற போது அவரது கண் இமைக்கு அடியில் ஆபத்தான அளவு காண்டாக்ட் லென்ஸ்கள் இருப்பது தெரிய வந்தது.
அந்த பெண் தொடர்ந்து 23 நாட்கள் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக லென்ஸை அகற்ற மறந்து விட்டதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.