தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 15 ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.