எடப்பாடி பழனிச்சாமி ஷாக்; எகிறி பாயும் முக்கிய தளபதி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமை பதவிக்கான மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும்,

மற்றொரு அணியாகவும் இயங்கி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இரு தரப்பினரும் மாறி மாறி கொடுத்த புகார்களின்பேரில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படக் கூடாது என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாருடைய அதிமுக கட்டுப்பாட்டில் இருக்கிறது என, புரியாமல் தொண்டர்கள் குழம்பி போய் கிடக்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களுக்கு கிடைத்த ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு அதிமுகவை கைப்பற்றி தலைமை பதவியை அடைய தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில், தற்போதுள்ள ஆதரவாளர்களிலேயே முக்கிய தளபதியாக கருதப்படும் ராஜேந்திர பாலாஜி திடீரென ஓபிஎஸ் அணிக்கு மாற போவதாக கூறப்படும் தகவல் எடப்பாடி பழனிச்சாமியை ரொம்பவே கவலையில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மூலக்காரணமே முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தான் என்று இந்த விவகாரம் பற்றி நன்கு அறிந்த அதிமுக தொண்டர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

அதாவது விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விளாம்பட்டியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தேமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவுக்கு வந்தபோதே, ராஜேந்திர பாலாஜி சங்கத்தில் இருந்து வந்துள்ளார்.

இதை சூசகமாக உணர்ந்த மாஃபா பாண்டியராஜன் ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும் என்ற மனநிலையில் சென்னை ஆவடி பகுதிக்கு வந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு அமைச்சராகவும் ஆனார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால், கடந்த 2017ம் ஆண்டு மாஃபா பாண்டியராஜன் அமைச்சர் பதவியை இழந்தார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மோதல் விவகாரத்தில், இபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை மாஃபா பாண்டியராஜன் எடுத்து உள்ளதோடு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் எம்.பி சீட்டை பெற்றுவிடும் நோக்கத்தில் சொந்த ஊரில் தலைகாட்டி வருகிறார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமியும் பச்சைக்கொடி காட்டியதோடு மாஃபா பாண்டியராஜனுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி, ராஜேந்திர பாலாஜியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் அல்லாமல், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள வெம்பக்கோட்டை ரவிச்சந்திரன் மீதான பண மோசடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் மாஃபா பாண்டியராஜனை தற்காலிக மாவட்ட செயலாளராக இருந்து பணியாற்றுமாறு எடப்பாடி பழனிச்சாமி வாய்மொழியாக உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், பணத்தை தண்ணீராக செலவழித்து விருதுநகர் அதிமுக தொண்டர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தும் நாடாளுமன்ற தேர்தலில் பலன் இல்லாமல் போய்விடுமோ? என்ற பீதியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி இனியும் தொடர்ந்து, மாஃபா பாண்டியராஜனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்சத்தில், ஓபிஎஸ் அணிக்கு மாறுவது மேல் என்ற முடிவில் ராஜேந்திர பாலாஜி உள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல் இபிஎஸ் கூடாரத்தில் அனலை கிளப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.