ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் துணைக் குழு கூட்டம், வரும் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கவுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் துணைக்குழுவான, பயங்கரவாத தடுப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வழக்கமாக, அதன் தலைமையகமான அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும்; மிக அரிதாக, வேறு நாடுகளில் நடக்கும்.
இந்நிலையில், இந்த குழுவின் கூட்டம் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நம் நாட்டின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கவுள்ளது.
இதில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலான பயங்கரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதத்துக்கான நிதி ஆகியவற்றை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பயங்கரவாதத்தை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது,சவால்கள், அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு, அவற்றை முறியடிப்பது, சர்வதேச மனித உரிமை சட்டங்கள் ஆகியவை குறித்து உறுப்பு நாடுகளுக்கு இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
– புதுடில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement