லக்னோ, :உத்தர பிரதேசத்தில், பூட்டிய கடைக்கு வெளியே இருந்த மின்சார ‘பல்பை’ திருடிய போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் புல்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் ராஜேஷ் வர்மா.
இவர், அக்., ௬ல் தசரா பண்டிகையையொட்டி, இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தெருவில் நடந்து சென்ற இவர், பூட்டியிருந்த கடைக்கு வெளியே மாட்டப்பட்டிருந்த மின்சார பல்பை பார்த்தார்.
பின், சுற்றும் முற்றும் பார்த்த அவர், அந்த பல்பை கழற்றி தன் பையில் போட்டபடி நடந்தார். இந்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.
மறுநாள், கடைக்கு வெளியே இருந்த பல்ப் காணாமல் போனதைப் பார்த்த உரிமையாளர், கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தார்.
இதில், போலீஸ்காரர் பல்பை கழற்றி செல்வது தெரியவந்தது. இந்த ‘வீடியோ’வை கடை உரிமையாளர் சமூக வலைதளத்தில் பதிவிட இது வேகமாக பரவியது.
ஆனால், பல்பை கழற்றி, தான் பணிபுரிந்த இடத்தில் இருட்டாக இருந்ததால், அங்கு மாட்டியதாக போலீஸ்காரர் வாதாடினார். இருப்பினும், ராஜேஷ் வர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement