சேலம்: சேலம் பொன்னமாபேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது வீட்டின்
முதல்மாடியில் மாணிக்கம் (60) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இவரது மனைவி ராஜேஸ்வரி (55). மூத்த மகள் பிரியா (36), 2வது குழந்தை
பிரசவத்திற்காக வந்தவர், மகன் அவினேஷ் (7) மற்றும் ஒரு மாத குழந்தை
ஹனித்ராவுடன் தாய் வீட்டில் தங்கினார். கணவரை இழந்த 2வது மகள் பானுமதி (32)
மகள் தீக்ஷிதாவுடன் (4) உடன் தங்கி இருந்தார். நேற்று அதிகாலை ராஜேஸ்வரி
பால் காய்ச்சுவதற்காக காஸ் அடுப்பை பற்றவைத்தபோது திடீரென பயங்கர வெடி
சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டின் சுவர் இடிந்து
விழுந்ததுடன், மேற்கூரையும் சிதைந்தது. தீப்பிழம்பில் சிக்கி, ராஜேஸ்வரி
மற்றும் தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கம், பிரியா, அவினேஷ், ஒருமாத குழந்தை
ஹனித்ரா, பானுமதி, தீக்ஷிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். விசாரணையில், நேற்று
முன்தினம் இரவு தூங்கச் சென்றபோது, சமையல் சிலிண்டரை ஆப் செய்யவில்லை என
தெரியவந்தது.
