மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 91வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று (அக்.,18) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்துவந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி (67 வயது) தேர்வு செய்யப்பட்டார். பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வானார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement