காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சடலமாக மீட்பு! – தாய் கண்முன் நடந்த சோகம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள சிங்களகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மகள் பெயர் ஜீவிதா. ஜீவிதா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவிதா நேற்றும் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால், அவரால் பேருந்தில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தாய் கவிதா, கல்லூரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று, அங்கிருந்த தன் மகள் ஜீவிதாவை அழைத்துக் கொண்டு, கொக்குவாரி ஆறு வழியாக தரைபாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, கொல்லிமலையிலிருந்து வந்த நீரின் காரணமாக, கொக்குவாரி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அந்த தரைப்பாலத்தின் மீது வெள்ளம் வேகமாக செல்ல ஆரம்பித்துள்ளது. ஆனால், அந்தப் பகுதிக்கு வந்த கவிதா, ஜீவிதாவும் இருசக்கர வாகனத்தில் அந்த தரைபாலத்தைக் கடக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இதில், அவர்கள் வாகனத்தோடு வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில், கவிதா கரை ஓரமாக இருந்த மரக்கிளை ஒன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, வெள்ளப்பெருக்கில் தொடர்ந்து அடித்துச் செல்லாமல் தடுக்கப்பட்டார்.

ஜீவிதான

ஆனால், அவர் மகள் ஜீவிதா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிந்தவர்கள் மரக்கிளையைப் பிடித்தபடி இருந்த கவிதாவை காப்பாற்றியுள்ளனர். ஆனால், கல்லூரி மாணவியை வெள்ள நீர் இழுத்துச் சென்றதால், அவர் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பி நின்றனர். ஆற்றுக் கரையில் தொடர்ந்து சென்று பார்த்தும், மாணவியைக் கண்டறியமுடியவில்லை. இதனால், மாணவியை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் அந்தப் பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

மரணம்

தீயணைப்புத் துறையினரின் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டதால், மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மாணவியை தேடும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சுமார் 13 நேரத்துக்குப் பிறகு மாணவி தரைப்பாலத்தில் அடித்து செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுப் புதரில் மாணவி ஜீவிதா சடலமாக மீட்கப்பட்டார். வெள்ள நீரில் மாணவி அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.