முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி- எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித்; சிந்தக கருணாரத்ன நெறிப்படுத்தினார்.

தற்போது வெளிநாட்டிலிருக்கும் பஸில் ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதா? என ஊடகவியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இது தொடர்பாக அமைச்சரவையில் எந்தப் பேச்சுவார்த்;;;தையும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்வதற்கான திருத்த சட்டமூலம் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரவு, செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரச சேவை முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கும் அரசாங்கத்தின் வளங்களை பயனுள்ளதாக முகாமைத்துவம் செய்வதற்காகவும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்காக தற்பொழுது திரைசேரியிலுள்ள கட்டுப்பாட்டாளர் நாயகத்;;;;தின் அலுவலகக் கடமைகளை விரிவுபடுத்தி அவற்றை செயல்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கும் தேசிய சொத்து, கோப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் அரச சொத்துக்கள் தொடர்பில் மத்திய தரவுக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தும் வகையில் பொருத்தமான விதிகளை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரச சொத்துக்களின் முகாமைத்துவத்திற்;காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான புதிய திருத்த சட்டமூலமொன்றை வகுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு வரி வருமானம் மற்றும் வரி அல்லாத வருமானம் என்ற ரீதியில் வருமானம் கிடைக்கும் முக்கிய இரண்டு வழிகள் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் வரி வருமானம் பொது மக்களிடம் இருந்து பெறப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

வரியைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து சந்தர்ப்பத்திலும் உலகில் அனைத்து நாடுகளிலும் மக்கள் மறைமுக வரி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வரி அல்லாத வருமானம் இலங்கையில் குறைந்த சதவீதமாகும். இதில் வருமானம், வருமானப் பிரிவுகள், வாடகை, குத்தகை போன்றவை உள்ளடங்கும் என்றும்; அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வரி அல்லாத வருமானம் இலங்கைக்கு 15சதவீதமாகும். வரி அல்லாத வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சொத்துக்களை குத்தகைக்கு வழங்கல் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.