ஐ எம் வெயிட்டிங்: அடுத்த ரவுண்டுக்கு தயாரான பிரணிதா

பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் உதயன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் அவர் அருள்நிதி ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் படங்களில் நடித்தார். அதன் பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள்,. ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு நிதின் ராஜ் என்ற தொழில் அதிபரை மணந்து கொண்டவர் கடந்த ஜூன் மாதம் தாய் ஆனார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டார்.

தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு, அம்மா கடமைகளை முடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் நடிக்கத் தயாராகி விட்டதை அறிவித்தார். இதற்கிடையில் கன்னடத்தில் ராமண அவதாரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.