மைசூரு : சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டுள்ள ம.ஜ.த., தன் செல்வாக்கை தக்க வைக்கும் வகையில், மைசூரில் இன்றும், நாளையும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.
மாநில கட்சியான ம.ஜ.த.,வுக்கு பழைய மைசூரு பகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது. இந்த செல்வாக்கை முறியடிக்க, பா.ஜ., காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆனால், தன் பலத்தை தக்க வைக்க, ம.ஜ.த., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் இன்றும், நாளையும், மைசூரில் முக்கிய கூட்டம் நடத்த உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்காக, நவம்பர் 1ம் தேதி முதல் ‘பஞ்சரத்னா’ என்ற ம.ஜ.த.,வின் விழிப்புணர்வு ரதம் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்கிறது.
இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மைசூரில் பெரிய அளவில் மாநாடு நடத்தி, தொண்டர்களை தட்டி எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர். கட்சியின் அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளையில், மைசூரு மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இப்போதே வேட்பாளர்களை தேர்வு செய்து, தொகுதிகளில் கட்சியை பலப்படுத்தும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement