வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதாரபாத்: தெலுங்கானாவில் அரசுத்தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுத வந்த பெண் தேர்வர்களிடம் தாலி, கொலுசு, தோடு ஆகியவற்றை அகற்றச்சொல்லி கட்டாயப் படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில அரசுப்பணி காலியிடங்களுக்கு அம்மாநில அரசு தேர்வாணையத்தின் சார்பில் குரூப் -1 தேர்வு கடந்த 16-ம் தேதி மாநிலம் முழுதும் தேர்வு நடந்தது.இதில் அடிலாபாத் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுத வந்த பெண் தேர்வர்களை போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
![]() |
அப்போது அவர்கள் அணிந்திருந்த நெக்லஸ்கள், வளையல்கள் , கால் கொலுசு, தோடு, மட்டுமின்றி திருமணமான பெண்கள் கழுத்தில் கட்டியிருந்த தாலியையும் கழற்றி வைத்துவிட்டு செல்ல வேண்டும் என கெடுபிடி காட்டினர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெண்கள், வேறு வழியின்றி தங்கள் தாலிகளை கழட்டி வைத்துவிட்டு தேர்வு எழுதினர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அடிலாபாத் எஸ்.பி. உதய்குமார் ரெட்டி கூறுகையில், “தேர்வு எழுத வந்த பெண்களிடம் தாலியை கழட்டுமாறு போலீசார் கூறியது உண்மைதான்.
இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. உண்மை நிலவரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். இந்த சம்பவத்திற்கு பா.ஜ., காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement