கோவையில் பரபரப்பு.. போலீஸ்கார் வீட்டையே அம்பேல் செய்த அரசு அதிகாரி.!

கோயம்புத்தூரில் வசித்து வரும் சுரேஷ்குமார் என்பவர், அம்மாநகர காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் வீட்டு வசதி வாரியத்தின் அடிப்படையில் வீடு விற்பனை திட்டத்தில் விண்ணப்பித்தனர். அதில், இவர்களுக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு, வ.உ.சி நகரில் உள்ள மத்திய வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த வீட்டின் விலை 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுக்கு இருவரும்  தவணை முறையில் பணம் செலுத்தி வந்தனர். 

இந்நிலையில் வீடுகுறித்த பொது அதிகாரத்தை, சுரேஷ்குமார் சுசேந்திரன் என்பவரிடம் வழங்கினார். இவர்கள் இருவரும் வீட்டு வசதி வாரியத்துக்கு செலுத்த வேண்டிய பணம் அனைத்தையும் கடந்த 2016ல் செலுத்தி முடித்துள்ளனர்.

இதையடுத்து, வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்வதற்காக, உரிய சான்றிதழ்களுடன் சுரேஷ்குமார் வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, அந்த வீடு சுசீந்திரன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வர சுரேஷ்குமாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

அதன்பின்னர், சுசேந்திரனுக்கு வழங்கிய பவரை அவர் தவறாக பயன்படுத்தி,  வீட்டு வசதி வாரியத்தில் விற்பனை மற்றும் சேவைப்பிரிவு மேலாளராக பணியாற்றிய ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து, மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி,  கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், வீட்டு வசதி அதிகாரி ஸ்ரீதர் மற்றும் சுசேந்திரன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடிக்கு முக்கிய காரணமான வீட்டு வசதி வாரிய அதிகாரி ஸ்ரீதரை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.