திறமைக்கு இல்லை உடம்புக்குத்தான் மதிப்பு – சிம்பு பட நடிகையின் ஓபன் டாக்

முன்னா மைக்கேல் என்ற இந்தி படத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அதன் பின் டோலிவுட்டில் சவ்யசாச்சி, மிஸ்டர் மஜ்னு, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதனையடுத்து அவர் தமிழிலும் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் படம்தான் நிதிக்கு தமிழில் முதல் படம். அந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். தமிழில் முக்கியமான படங்களை இயக்கிய சுசீந்திரன் அந்தப் படத்தை இயக்கியிருந்ததால் பாலிவுட், டோலிவுட்டில தமக்கு கிடைக்காத ரசிகர்களின் கவனம் கோலிவுட்டில் கிடைக்குமென்று நிதி அகர்வால் நம்பினார்.

ஆனால் ஈஸ்வரன் படமும் தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் மனதை தளரவிடாத அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முயற்சி செய்தார். அப்படி அவர் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. செல்லும் இடமெல்லாம் தோல்வியை சந்தித்ததால் நிதி அகர்வால் சிறிது காலம் சைலெண்ட்டாக இருக்கிறார். 

இந்நிலையில் நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “சினிமா துறையில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை நான் நம்பமாட்டேன்.அழகைத்தான் பார்க்கிறார்கள். திறமைக்கு மதிப்பு இல்லை. உடம்பை காட்டினால்தான் வாய்ப்புகள் கொடுப்பார்கள். சிலர் மட்டுமே திறமையை பார்த்து வாய்ப்புகள் கொடுப்பார்கள். 

இன்னொரு விஷயம் என்னவென்றால் என்னை போன்ற கதாநாயகிக்கு பெரிய கதாநாயகர்கள் படங்களில் வாய்ப்பு கிடைத்தது என்றால் சம்பளம்தான் காரணம். நான் சம்பள விஷயத்தில் கெடுபிடி செய்ய மாட்டேன்.அவர்கள் கொடுப்பதை பெற்றுக்கொள்வேன். இப்போதுவரை நான் நடித்திருக்கும் படங்கள் எல்லாவற்றிலும் அப்படித்தான் நடந்தது. எனக்கு முன் கதாநாயகியாக நடிக்க அணுகியவர்கள் அதிக சம்பளம் கேட்டதால் அவர்களை நிராகரித்துவிட்டு எனக்கு வாய்ப்பு கொடுத்ததை தெரிந்துகொண்டேன்” என்றார். நிதி அகர்வாலின் இந்தப் பேட்டி திரையுலகில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சிம்புவுடன் நிதி அகர்வால் காதலில் விழுந்திருப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணமென்றும் தகவல் பரவியது. அதேபோல் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடனும் சேர்த்து நிதி அகர்வால் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.