கவுஹாத்தி, :அருணாச்சல பிரதேசத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், பலியான நான்கு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான ஒருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது.
தாமதம்
ஐந்து வீரர்களை சுமந்து சென்ற இந்த ஹெலிகாப்டர், மிக்கிங் என்ற கிராமத்தின் மலைப்பகுதியில் நேற்று காலை விபத்துக்குள்ளானது.
போக்குவரத்து வசதி இல்லாத மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
ராணுவம் மற்றும் விமானப் படையினர், எம்.ஐ.௧௭ மற்றும் துருவ் ஹெலிகாப்டர்கள் வாயிலாக, விபத்தில் சிக்கிய வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு, அப்பகுதி மக்களும் உதவினர். இதில், நான்கு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான ஒருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆழ்ந்த இரங்கல்
”இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனையுற்றேன். உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது, அருணாச்சல பிரதேசத்தில், இந்த மாதத்தில் நிகழ்ந்த இரண்டாவது விபத்தாகும். ஏற்கனவே, தவாங் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் உயிரிழந்தார்; சிலர் காயமடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement