ஆயிஷா தப்பானவரா? நடிகர் விஷ்ணு விளக்கம்

டிக் டாக் மூலம் பிரபலமான ஆயிஷா இன்று சின்னத்திரையில் நடிகையாக பெரும் புகழை சம்பாதித்துள்ளார். தற்போது பிக்பாஸ் சீசன் 6-லும் போட்டியாளராக களமிறங்கி விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆயிஷாவின் காதலர் என்று சொல்லி வரும் தேவ் என்கிற நபர் ஊடகங்களில் ஆயிஷா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஆயிஷாவுக்கு பல காதலர்கள் இருப்பதாகவும் கூறி வருகிறார்.

ஜீ தமிழ் 'சத்யா' சீரியலில் ஆயிஷாவுடன் இணைந்து ஹீரோவாக நடித்த விஷ்ணு மீதும் தேவ் குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு விஷ்ணு விளக்கமளித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தையொட்டி டிடி பேசிய வீடியோவை ஒன்றை ப்ளே செய்து காட்டுகிறார். அந்த வீடியோவில், 'ஆணா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் தவறான பொருள தேர்ந்தெடுத்துட்டா யோசிக்காம கீழ வச்சிடுங்க. அவன் என்ன சொல்வான், இவ என்ன சொல்லுவான்னு யோசிக்காதீங்க. அது உங்க உயிரையே பறிச்சிடும்' என்று டிடி கூறுகிறார்.

அதை அப்படியே குறிப்பிட்டு பேசிய விஷ்னு, தேவ், ஆயிஷா எடுத்த தப்பான பொருள் என்றும் ஆயிஷாவின் கேரக்டரை டேமேஜ் செய்யவே அவன் அவ்வாறாக பேசி வருவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பில் ஆயிஷா வெளியேவந்தவுடன் தக்க பதில் அளிப்பார் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.