பவன் கல்யாணை பின்தொடரும் மர்ம நபர்கள் : போலீசில் புகார்

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது தனது புதிய படமான ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே யாரோ சில மர்ம நபர்கள் பவன் கல்யாணை பின் தொடர்ந்து நோட்டம் பார்த்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்சில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு வந்த இருவர் அவரது பாதுகாவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதையடுத்து ஐதராபாத் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பவன் கல்யாணின் வாகனத்தை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்களாம். அதன் காரணமாக இது குறித்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பில் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்கள். மேலும் ஆந்திர அரசுக்கு எதிராக விஜயவாடாவில் பவன் கல்யாண் ஆற்றிய உரை அங்குள்ள மீடியாக்களில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்துள்ளது. அதன் பிறகுதான் இதுபோன்று மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து நோட்டமிடுவதாகவும் பவன் கல்யாண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.