விழுப்புரத்தில் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று கதறிய சிறுவனை தரதரவென இழுத்து சென்று பள்ளியில் கொண்டு சேர்த்த தாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏமப்பூர் கிராமத்தை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், பள்ளிக்கு செல்ல மறுத்து சாலையிலேயே அடம்பிடித்துள்ளார். இதனை கண்ட அவரது தாய் சிறுவனின் கையை பிடித்து தரதரவென பள்ளிக்கு இழுத்து சென்றார்.
ஆனாலும் தாயின் கைபிடியில் இருந்து தப்பித்து ஓடிய சிறுவனை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தூக்கி சென்று பள்ளியில் கொண்டு சேர்த்தனர்.
அப்போது அந்த சிறுவன் என்னை விடுங்கள் என கதறி அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in