காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி யாழ்தேவி இன்று (05) மதியம் வவுனியா மதவாச்சிக்கு அருகில் புனேவ என்ற இடத்தில் தடம்புரண்டுள்ளது.
என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் இவ்வாறு தடம்புரண்டுள்ளன. ரயில் சேவைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதையின் ஊடான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இந்த ரயில் பாதையில் இன்றிரவு சேவையில் ஈடுபடவிருந்த சில ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.