ராய்ப்பூர் :சத்தீஸ்கரில், தன்னை கடித்த பாம்பை, 8 வயது சிறுவன் திரும்ப கடித்ததில், பாம்புஇறந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும், 8 வயது சிறுவன் தீபக், தன் வீட்டுக்கு வெளியே சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த நல்ல பாம்பு, தீபக் மீது ஏறி, அவன் கையில் சுற்றியது.
அலறிய சிறுவன், பாம்பை உதற முயன்றான். இதனால் கோபம் அடைந்த பாம்பு, சிறுவன் கையில் கடித்தது. கதறித் துடித்த தீபக், ஆத்திரத்தில் அந்த பாம்பை இரண்டு முறை திரும்பக் கடித்தான். இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்தது.உடனடியாக அந்த சிறுவனை, பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், ‘சிறுவனை லேசாகத் தான் பாம்பு கடித்துள்ளது. பாம்பு விஷத்தை உமிழவில்லை. இதனால் சிறுவனுக்கு ஆபத்து எதுவும் இல்லை’ என தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement