தமது பூர்வீக காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு ,மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

வலி வடக்கு, மயிலிட்டிப் பிரதேசத்தினை சேர்ந்த மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுவதை விரைவுபடுத்துமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

மயிலிட்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள தனியார் காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதற்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புக்களை தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக வைத்திருக்க விரும்புகின்ற தரப்புக்களை நம்பி ஏமாறாமல், பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வழிவகைகளில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், தை மாதத்தின் பின்னர் காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் விரைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே, குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி, பரவகால மழை ஓய்ந்த பின்னர், நேரடியாக சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

EPDP 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.