சேலம் மாவட்டத்தில் பிறந்து நான்கே நாட்கள் ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த பெண் குழந்தை மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் இடைத்தரகர் வளர்மதி, அவரது கணவர் மதியழகன் ஆகியோர் கொண்டு வந்த குழந்தையை ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர் லதா என்பவர் வாங்கும்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தையின் தாயின் அனுமதியின் பேரிலேயே குழந்தையை கொண்டு வந்ததாக கைதானவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.