குறட்டை விடாமல் நிம்மதியாக தூங்கனுமா? இந்த மூன்று பயிற்சிகளை மறக்கமால் செய்து பாருங்க.. விரைவில் பலன் தரும்!


இன்றைக்கு பலருக்கும் குறட்டை பிரச்சினை ஒரு முக்கியப்பிரச்சினையாக உள்ளது.

குறட்டை விடுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று நாக்கு தான்.

நாக்கு தூங்கும்போது பின்னோக்கி செலவதால் தொண்டைப் பகுதியில் உள்ள சுவாசக் குழாயின் மூச்சு சீரில்லாமல் சென்று குறட்டை உண்டாகிறது.

இதனை ஒரு சில எளியபயிற்சிகளை மூலம் சரி செய்யலாம் அவை என்ன என்பதை பார்ப்போம்.   

குறட்டை விடாமல் நிம்மதியாக தூங்கனுமா? இந்த மூன்று பயிற்சிகளை மறக்கமால் செய்து பாருங்க.. விரைவில் பலன் தரும்! | How To Stop Snoring And Sleep Peacefully

Image Credit: tommaso79/Shutterstock.com  

பயிற்சி 1 

முதலில் உங்கள் நாக்கின் நுனியால் மேலண்ணத்தை தொடவேண்டும். பின்னர் பின்னோக்கி நாக்கின் நுனியை கொண்டு செல்ல வேண்டும்.

அதே நிலையில் 15 நொடிகள் வைத்திருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு நாக்கை கொண்டு வரவும். சில நொடிகள் கழித்து அதேபோல் செய்யுங்கள். இவ்வாறு 5 முறை செய்யலாம்.

பயிற்சி 2 

நாக்கை மேல்புறமாக மடித்து உள்ளிழுங்கள். மேலண்ணத்தத்திற்கு நாக்கினால் அழுத்தம் நன்றாக கொடுக்க வேண்டும். பின்னர் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் இதேபோல் செய்ய வேண்டும்.

பயிற்சி 3 

நாக்கின் நுனியை கீழ்வரிசையில் உள்ள முன்பற்களை தொட்டபடி, ஆங்கில எழுத்தான ” ஏ” சொல்லுங்கள். நாக்கின் மத்திம பகுதியை மேலண்ணத்தில் அமுக்கம்படி சொல்ல வேண்டும்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.