இலவசமாக பெட்ரோல் கேட்டு தராத பெட்ரோல் பங்க் ஊழியர்களை போதை ஆசாமிகள், தாக்கி தகராறு செய்யும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி சாலையில் இயங்கிவரும் தனியார் பெட்ரோல் பங்கில், ஷாகிர், சிவகுமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இலவசமாக பெட்ரோல் போடுமாறு கேட்டு, தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் பெட்ரோல் போட மறுத்ததால், மதுபோதையில் இருந்த மூன்று பேரும், ஆத்திரத்துடன் தாக்கிய நிலையில், ஐம்பது ரூபாய் அளவிற்கு இலவசமாக பெட்ரோல் போட்டு அனுப்பியுள்ளனர்.
ஷாகிர் கொடுத்த புகாரின் பேரில் சபரிநாதன், வினோத்குமார், தவ்பிக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.