திருச்சி மாநகர் பகுதியில் எடமலைப்பட்டி புதூர், ராம்ஜி நகர் மற்றும் கருமண்டபம் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை நிகழ்கிறது.
அதனை தடை செய்வதற்காக மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த நிலையில், மொத்த விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரியான மதன் என்கிற மதுபாலனை நேற்று தனிப்படை போலீசார் மடக்கி அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வந்த சுரேஷ் (வயது 32) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன், அவரிடமிருந்து சுமார் 1.400 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.