வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:பிரிட்டனின் பணவீக்கம், அக்டோபர் மாதத்தில், 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
![]() |
புதிய வரி மற்றும் செலவு திட்டங்களை பிரிட்டன் வெளியிட உள்ள நிலையில், தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, மக்களின் வாழ்க்கை செலவுக்கான நெருக்கடியை தணிக்க, மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல், அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள், அக்டோபரில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தனர்.
![]() |
ஆனால் அவர்களின் கணிப்பையும் தாண்டி அதிகரித்து உள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை அதிகரித்ததை அடுத்து, பணவீக்கம், 1981 அக்டோபருக்கு பின் அதிக உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் சில்லரை விலை பணவீக்கம், கடந்த அக்டோபரில் 6.77 சதவீதமாக குறைந்துஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement