வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம்,அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன், வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

முன்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா மாவட்டத்துக்கன விஜயம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டிருந்தார்.

வவுனியா வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியா விமானப் படைத் தளதில் வரவேற்றார்..

இந்நிலையில்.வவுனியா நகர சபை மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது மாவட்டங்களின் நிலவரங்களையும் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் தமது கருத்துக்களையும் வெளிப்படுத்தினார்.

இதன்போது பிரதேசச் செயலகங்கள் தோறும் கிராம சேவகர் பிரிவுகளை ஒன்றிணைத்து அவற்றுக்கான உத்தியோகஸ்தர்களை நியமித்து உணவு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வுகளையும், உணவு உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்புக்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் தெரிவித்திருந்தார்.

EPDP News

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.