ஐநா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவை நிரந்தரமாக்க பிரான்ஸ் ஆதரவு!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்
சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாதுகாப்பு கவுன்சில் அதன் அதிகாரத்தையும், செயல்திறனையும் வலுப்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் இருந்து அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டுத் தன்மையைப் பாதுகாக்க, விரிவாக்கப்பட்ட கவுன்சில் 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்,” என தெரிவித்தார்.

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நூதன நாடகம்; அம்பலப்பட்ட சுவாரஸ்யம்.!

முன்னதாக
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்
சீராய்வு தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய ஐக்கிய நாடுகளுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா உட்வார்ட் கூறுகையில், “இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்ரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.