சிட்னி,
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 94 ரன்களும், லபுஷேன், மார்ஷ் அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ரஷித் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.